சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி தொப்பை கணேஷ் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன
 சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
Published on

சென்னை,

சென்னையை அடுத்த மாதவரம் ரவுண்டானா அருகே ரவுடி தொப்பை கணேஷ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். கொள்ளை வழக்கில் கணேஷை கைது செய்ய முயன்ற போது, அவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடியதால் தற்காப்புக்காக என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி தொப்பை கணேஷ் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரூ.25 லட்சம் பணமும் 15 பவுன் நகையும் கொள்ளையடித்த வழக்கில் அவரை கைது செய்ய போலீசார் சென்றபோது இந்த என்கவுன்ட்டர் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com