வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகுண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
Published on

சேலம் அம்மாப்பேட்டை வித்யா நகரை சேர்ந்தவர் அப்சர். ஆட்டோ டிரைவர். இவர், கடந்த மாதம் 24-ந் தேதி தனது ஆட்டோவை தாதகாப்பட்டி கேட் பகுதியில் நிறுத்திவிட்டு அருகில் உள்ள தேனீர் கடைக்கு டீ குடிக்க சென்றார். அந்த வழியாக வந்த செவ்வாய்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி பாபு என்பவர் அப்சரை வழிமறித்து மிரட்டி ரூ.1,600-ஐ பறித்துக்கொண்டார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீஸ் விசாரணையில், பள்ளப்பட்டி மற்றும் இரும்பாலை போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பாபு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிப்பறி, கொலை முயற்சி போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததும், அவர் மீது 3 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனால் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வருவதால் ரவுடி பாபுவை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனருக்கு அன்னதானப்பட்டி போலீசார் பரிந்துரை செய்தனர். பின்னர் அதை ஏற்று பாபுவை குண்டர் சட்டத்தில் கைது செய்து நேற்று போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com