ஆர்.ஆர். நகரில் சேவை ரோடு அமைக்க வலியுறுத்தி போராட்டம்

ஆர்.ஆர். நகரில் சேவை ரோடு அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
ஆர்.ஆர். நகரில் சேவை ரோடு அமைக்க வலியுறுத்தி போராட்டம்
Published on

விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகரில் சேவை ரோடு அமைக்க கோரி அனைத்து கட்சி சார்பில் மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை மறியல் போராட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் கூடிய போது விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பிரச்சினை குறித்து வருகிற 25-ந் தேதி மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவெடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. எனினும் அப்பகுதியிலுள்ள 120-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com