ரூ.1 கோடி சைபர் மோசடி - ரிசர்வ் வங்கி அதிகாரிகளோடு கமிஷனர் ஆலோசனை

சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வங்கிக்கணக்கை 'ஹேக்' (முடக்கி) செய்து ரூ.1 கோடியை நூதனமான முறையில் கொள்ளையடித்து உள்ளனர்.
ரூ.1 கோடி சைபர் மோசடி -  ரிசர்வ் வங்கி அதிகாரிகளோடு கமிஷனர் ஆலோசனை
Published on: 

சைபர் மோசடி குற்றங்களை தடுப்பதற்கு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேற்று தனது அலுவலகத்தில் ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

நூதன கொள்ளை

'சைபர்' குற்றவாளிகளின் கொள்ளை அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் நூதனமான முறையில் வங்கிக்கணக்குகளில் இருந்து பணத்தை கணநேரத்தில் கொள்ளையடித்து விடுகிறார்கள். தமிழக ஊரக வளர்ச்சித்துறையின் வங்கிக்கணக்கில் இருந்து சமீபத்தில் ரூ.22 கோடியை நூதனமான முறையில் அபகரித்து விட்டார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக ‘சைபர் கிரைம்' போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை அதிரடியாக கைது செய்தார்கள். ரூ.39 லட்சமும் மீட்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவன வங்கிக்கணக்கு

இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வங்கிக்கணக்கை 'ஹேக்' (முடக்கி) செய்து ரூ.1.3 கோடியை நூதனமான முறையில் கொள்ளையடித்து விட்டனர்.

கொள்ளையடித்த பணத்தை 24 வங்கிக்கணக்குகள் மூலம் பரிமாற்றம் செய்துள்ளனர். இது போல் வங்கிக்கணக்குகளில் இருந்து நேரடியாக பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் போலீசாருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது.

பெருங்குடியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு 'சைபர் கிரைம்' போலீசார்தான் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெரும்பாலான இதுபோன்ற குற்றங்களை சைபர் குற்றவாளிகள் வெளிமாநிலங்களில் இருந் தும், வெளிநாடுகளில் இருந்தும்தான் அரங்கேற்றுகின்றனர். ஊரக வளர்ச்சி துறை வங்கிக்க ணக்கில் இருந்து ரூ.22 கோடி சுருட்டிய வழக்கில் கைதான 7 பேரும் முக்கியமான குற்றவா ளிகள் இல்லை. இவர்கள் தங்கள் வங்கி கணக்கை கொள்ளையடித்த பணத்தை பரிமாற்றம் செய்வதற்கு கொடுத்து உதவி உள்ளனர்.

இதற்காக லட்சக்கணக்கில் கமிஷன் வாங்கி உள்ளனர். இந்த வழக்கை பொறுத்தமட்டில் முக்கிய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

கமிஷனர் அவசர ஆலோசனை

இதுபோல் சைபர் குற்றவாளிகள் தங்கள் கொள்ளை வேட்டையை அரங்கேற்றுவதற்கு பெரும்பாலும் வங்கிக்கணக்குகளைதான் பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேற்று தனது அலுவலகத்தில் ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் ரிசர்வ் வங்கியின் முதன்மை பொதுமேலாளர் அனிதா பட்நாயக். பொதுமேலாளர் சதீஷ்குமார், துணை பொதுமேலாளர் சுதாகர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். சைபர் குற்றவாளிகள் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை கொள்ளைய டிக்கும் குற்றங்களை தடுப்பது குறித்தும், வங்கிக்கணக்குகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதற்காக உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. வங்கிகளோடு இணைந்து சைபர் குற்றவாளிகளின் அட்டூழியங்களை ஒழித்துக்கட்டுவதற்கு கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

X