

சென்னை,
தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக நடந்த சாலை அமைக்கும் பணிக்கு காண்டிராக்ட் விட்டதில், சுமார் ரூ.3 கோடி தொகைக்கான இரண்டு பில்களை அனுமதிப்பதற்காக ரூ.10 லட்சம் லஞ்சம் கைமாறியதாக வந்த புகார் அடிப்படையில், சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அதன் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சூப்பிரெண்டிங் என்ஜினீயர் மற்றும் காண்டிராக்டர் உள்பட 4 பேர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.