கடலூரில் பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி

கடலூரில் பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தது தொடாபாக 4 பேர் மீது போலீசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா.
கடலூரில் பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி
Published on

கடலூர் மஞ்சக்குப்பம் ராஜாம்பாள்நகரை சேர்ந்தவர் தனஞ்செழியன் மனைவி வள்ளி (வயது 40). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ராமு மனைவி சாவித்திரி வீடு கட்டுவதற்கும், தனது கடையை விரிவுப்படுத்துவதற்கும் ரூ.14 லட்சம் வாங்கியதாக தெரிகிறது. அதன்பிறகு ரூ.4 லட்சத்தை திருப்பி கொடுத்துள்ளார். மீதி பணத்தை கேட்ட போது, தராமல் காலதாமதம் செய்து ஏமாற்றி வந்துள்ளனர். சம்பவத்தன்று வள்ளி, சாவித்திரி வீட்டுக்கு சென்று பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது அவரை சாவித்திரி, அவரது மகன்கள் ஞானவேல், குமார் மற்றும் மருமகள் பிரியா ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கி, பணத்தை தராமல் மோசடி செய்துவிட்டதாக தெரிகிறது. இது பற்றி வள்ளி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சாவித்திரி உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com