மதுபாட்டிலுக்கு ரூ.10 வாங்குவது விலை பட்டியலுக்குள் கொண்டு வரப்படும்: அமைச்சர் விக்னேஷ்

டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் கூறினார்.
மதுபாட்டிலுக்கு ரூ.10 வாங்குவது விலை பட்டியலுக்குள் கொண்டு வரப்படும்: அமைச்சர் விக்னேஷ்
Published on

கோவை,

கோவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

டாஸ்மாக் நிர்வாகத்தில் பல மாற்றங்களை கொண்டு வர உள்ளோம். ஆண்டுக்கு மட்டும் ரூ.1,000 கோடி, கட்சிகளுக்கு சென்று கொண்டு இருந்தது. தற்போது அதை அரசுக்கு கொண்டு வர வழிவகை செய்து உள்ளோம். டாஸ்மாக் மட்டுமல்லாமல் தனியார் மதுபான விடுதிகளிலும் பார்ட்டி பண்ட் வாங்கி கொண்டு இருந்தனர். அதையும் அரசுக்கு நேரடியாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் தொடர்பாக ஒரு சிறப்பு சட்டம் கொண்டு வர உள்ளோம். விலை பட்டியலில் உள்ள தொகையை மட்டும்தான் வாங்க வேண்டும். இனி ரூ.10-க்கு தனியாக ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது. இனிமேல் இந்த முறையை தான் கையாள போகிறோம். அதாவது பாட்டிலுக்கு தனியாக ரூ.10 வாங்கப்படாது. அந்த தொகை விலைபட்டியலிலேயே இருக்கும். பாட்டிலை திரும்ப கொடுத்தால் மது வாங்குபவர் ரூ.10-ஐ வாங்கிக்கொள்ளலாம்.

அதையும் மீறி பாட்டிலுக்கு ரூ.10 வசூலித்தால் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் ஊழியர்கள் குறைந்த வருமானத்தில் பணி செய்து வந்ததால், கடந்த ஆட்சியாளர்கள் பணம் வசூலிக்கும் சூழலை ஏற்படுத்தி உள்ளனர். டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். 20 ஆண்டாக அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாதது வேதனை அளிக்கிறது. அதை சரிசெய்யும் வேலையில் அரசு இறங்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com