ரூ.1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ரத்தீசுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன்

வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் ரத்தீஷ் வெளிநாடு களில் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியானது
ரத்தீஷ்
Published on: 

சென்னை,

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இத னையடுத்து கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் 6-ந்தேதி டாஸ்மாக் தலைமை அலுவல கம், மதுபான ஆலைகள் மற்றும் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்த சோதனையின்போது சுமார் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருக்கும் தக வல் வெளியானது.

இந்த வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் ரத்தீஷ் வெளிநாடு களில் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியானது. அவர் தொடர்பாக 'லுக்-அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. சர்வதேச போலீசின் உதவியு டன் 'ரெட் கார்னர்' நோட்டீசும் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கிடையே தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரத்தீசுக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அந்த சம்மனில் கூறப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது. அந்த சம்மனில் அடுத்த வாரம் ஆஜராகும்படி கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அந்த சம்மனை லஞ்சஒழிப்பு போலீசார், அவருடைய வீட்டில் அவரது குடும்பத்தி னரிடம் கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

X