குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்; சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்பு - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்; சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்பு - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் பல்வேறு திட்டப்பணிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார். மேலும் கோட்டூர் ஆவாரம்பட்டியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார். இது தொடர்பாக எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com