கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு ரூ.1,000 மதிப்பூதியம் பரிசு பெட்டகமும் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், துப்புரவு பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு ரூ.1,000 மதிப்பூதியம் மற்றும் பரிசு பெட்டகம் வழங்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு ரூ.1,000 மதிப்பூதியம் பரிசு பெட்டகமும் அறிவிப்பு
Published on

சென்னை

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட தகவல் வருமாறு:-

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகராட்சிகள், மற்றும் நகராட்சிகளில் இருந்து 2 ஆயிரத்து 400 பணியாளர்கள், பேரூராட்சிகளில் இருந்து 1,624 பணியாளர்கள், ஊரக வளர்ச்சித் துறையில் இருந்து 3 ஆயிரத்து 60 பணியாளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 84 துப்புரவு பணியாளர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த துப்புரவு பணியாளர்கள் கடும் பாதிப்படைந்த சூழ்நிலையிலும், உள்ளூர் மக்களுடன் இணைந்து சிறப்பாக தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

இப்பணிகளில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களை பாராட்டும் விதமாக அவர்களுக்கு மதிப்பூதியம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டார். அதன்படி ஒவ்வொரு துப்புரவு பணியாளர்களுக்கும் தலா ரூ.1,000 சிறப்பு ஊக்கத்தொகையும், அரிசி, போர்வை, லுங்கி உள்பட 16 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகம் ஒன்றும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com