தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த ரூ.1,200 கோடி ஒதுக்கீடு: மத்திய மந்திரி தகவல்

தமிழகத்தில் மீன்பிடிதுறைமுகங்களை மேம்படுத்த ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பாபநாசத்தில், மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த ரூ.1,200 கோடி ஒதுக்கீடு: மத்திய மந்திரி தகவல்
Published on

தஞ்சை,

பயணிகளின் கோரிக்கைகயை ஏற்று தஞ்சை மாவட்டம் பாபநாசம் ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி இயக்குவதற்கான தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் குத்துவிளக்கேற்றினார். பின்னர் திருச்செந்தூ எக்ஸ்பிரஸ் ரெயிலை பாபநாசத்தில் நிறுத்தி இயக்கப்படுவதை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கடல்பாசி பூங்கா

பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் ரெயில்வே துறை பல சாதனைகளை புரிந்துள்ளது. தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக பிரதமர் நரேந்திரமோடி மிகவும் கவனமுடன் செயல்பட்டு அதிக அளவு நிதி ஒதுக்கி உள்ளார்.

கடல்பாசி என்பது தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடல்பாசி உற்பத்தியை பெருக்குவதற்கு ராமநாதபுரம், மண்டபம் பகுதிக்கு கடல்பாசி பூங்காவை வழங்கி உள்ளார்.

இது குறித்து தமிழக அரசு ரூ.126 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. இந்த திட்ட மதிப்பீடு தற்போது பரிசீலனையில் உள்ளது.

ரூ.1,200 கோடி

மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் நிதியின் கீழ் தமிழகத்துக்கு மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.1,200 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. சென்னை, திருவொற்றியூரில் ரூ.150 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் துறைமுக பணி 90 சதவீதம் நிறைவு பெற்று உள்ளது.

செங்கல்பட்டுக்கும் விழுப்புரத்துக்கும் இடையே மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கி உள்ளோம். விசாகப்பட்டினம், ஒடிசா, கொச்சி, சென்னையில் காசிமேடு ஆகிய 4 துறைமுகங்களை சர்வதேச அளவில் மேம்படுத்த ரூ.100 கோடியில் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு மத்திய மந்தி எல்.முருகன் கூறினா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com