ரூ.17 லட்சம், 18¾ பவுன் நகைகளுடன் ராஜஸ்தான் வாலிபர் மாயம்

செம்பனார்கோவிலில் உள்ள அடகு கடையில் இருந்த ரூ.17 லட்சம் மற்றும் 18¾ பவுன் நகைகளுடன் மாயமான ராஜஸ்தான் வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.17 லட்சம், 18¾ பவுன் நகைகளுடன் ராஜஸ்தான் வாலிபர் மாயம்
Published on

திருக்கடையூர்:

அடகு கடை

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் அடகு கடை நடத்தி வருபவர் சுனில்குமார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தை சேர்ந்த சுனில்குமார், மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது அடகு கடையில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்(வயது 25) என்பவர் கடந்த 9 மாதங்களாக வேலை பார்த்து வந்தார்.

ரூ.17 லட்சம்-18 பவுன் நகைகளுடன் மாயம்

இந்த நிலையில் சுனில்குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அடகு கடையின் பொறுப்பை தினேசிடம் ஒப்படைத்து விட்டு ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றார். இதனைத்தொடர்ந்து தினேஷ் கடையின் பொறுப்பை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அடகு கடையை பூட்டிவிட்டு சென்ற தினேஷ், மறுநாள் கடையை திறக்காமல் தலைமறைவானதாக தெரிகிறது. இதனை அறிந்த சுனில்குமார், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்தார்.

பின்னர் செம்பனார்கோவிலில் உள்ள தனது அடகு கடைக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.17 லட்சம் மற்றும் 18 பவுன் நகைகளை தினேஷ் எடுத்துக்கொண்டு தலைமறைவானது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்த சுனில்குமார் கொடுத்த புகாரின் பேரில் செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com