கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் ரூ.1.85 கோடி அபராதம் வசூல் - மாநகராட்சி கமிஷனர் தகவல்

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் ரூ.1.85 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் ரூ.1.85 கோடி அபராதம் வசூல் - மாநகராட்சி கமிஷனர் தகவல்
Published on

சென்னை,

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு வெளியிட்டுள்ள நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை அனைத்து இடங்களிலும் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும், பொது இடங்களுக்கு செல்லும் போதும், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் பயணங்கள் மேற்கொள்ளும் போது தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இதுநாள் வரை பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் முகக்கவசம் அணியாத தனிநபர்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களிடமிருந்து ரூ.1 கோடியே 85 லட்சத்து 67 ஆயிரத்து 117 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத தனிநபர் அல்லது தொழில், வணிக மற்றும் இதர நிறுவனங்கள் மீது அபராதம் அல்லது அபராதத்துடன் மூடி சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com