

திண்டுக்கல்
திண்டுக்கல் முருகபவனம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், அந்தப் பகுதியை சேர்ந்த இடம் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். ரூ 50 ஆயிரம் ரூ.1லட்சம் ரூ. 2 லட்சம் என பலவகையான ஏலச்சீட்டு நடத்தி இருக்கிறார். இதில் முருக பவனம் மட்டுமின்றி திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் 200க்கும் மேற்பட்டோர் சீட்டு பணம் செலுத்தி வந்துள்ளனர். அதில் பலருக்கு சீட்டு தவணை காலம் முடிந்தும் பணம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் அந்தப் பெண் கடந்த ஒரு மாதமாக வெளியூர் சென்று விட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் சீட்டு பணம் செலுத்தி ஏமாந்த மக்கள் தாங்கள் மோசடி செய்யப்பட்டதாக கூறி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர். இதில் ரூ 2 கோடி வரை மக்கள் சீட்டு பணம் செலுத்தி இருப்பதாக தெரிவித்தனர்.