ரூ.2 கோடி பணம் பெற்று, 22 பேரை வேலைக்கு சேர்த்தேன்: கைதான போலீஸ்காரர் சித்தாண்டி பரபரப்பு வாக்குமூலம்

ரூ.2 கோடி அளவுக்கு பணம் பெற்று, 22 பேரை அரசு வேலைக்கு சேர்த்து விட்டேன் என்று போலீஸ்காரர் சித்தாண்டி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:-
ரூ.2 கோடி பணம் பெற்று, 22 பேரை வேலைக்கு சேர்த்தேன்: கைதான போலீஸ்காரர் சித்தாண்டி பரபரப்பு வாக்குமூலம்
Published on

சென்னை,

இடைத்தரகர் ஜெயக்குமார்தான் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு ஆட்களை வேலைக்கு சேர்த்து விட்டார். நான் ரூ.2 கோடி அளவுக்கு பணம் வாங்கிக்கொண்டு, 22 பேரை அரசு வேலையில் சேர்த்து விட்டேன். குரூப்-4 தேர்வில் 15 பேரும், குரூப்-2ஏ தேர்வில் 7 பேரும் அதில் அடங்குவார்கள். நான் ஜெயக்குமாரிடம் நேரடியாக இந்த பணத்தை கொடுக்கவில்லை.

எனது நண்பரும், போலீஸ்காரருமான முத்துக்குமாரிடம் நான் பணத்தை கொடுத்தேன். அவர் விழுப்புரம் மாவட்டம், அரியூர் கிராம நிர்வாக அதிகாரி நாராயணன் என்ற சக்தி என்பவர் மூலம் ஜெயக்குமாரிடம் பணத்தை கொடுத்தார். கிராம நிர்வாக அதிகாரி சக்திக்கும் இந்த முறைகேடுகளில் முக்கிய பங்கு உண்டு. ஒருவேளை வேலை கிடைக்காமல் போனால், கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவார்கள். இவ்வாறு அவர் தனது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கைதான இன்னொரு போலீஸ்காரர் பூபதி ரூ.55 லட்சத்தை கொடுத்து 5 பேரை வேலைக்கு சேர்த்து விட்டதாக தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். முறைகேடுகளுக்கு இடைத்தரகர் ஜெயக்குமாருடன் இணைந்து செயல்பட்டுள்ள, கிராம நிர்வாக அதிகாரி சக்தியும் கைது செய்யப்பட உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com