வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு; முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு வழங்கப்படும் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு; முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
Published on

சென்னை,

பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பாராலிம்பிக்கில் தங்கவேலு வெல்லும் 2-வது பதக்கம் இதுவாகும். வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் மோடி, முதல் அமைச்சர் மு. க ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து பாராஒலிம்பிக்சில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி அரசு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com