அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி: ராஜேந்திரபாலாஜி மீது பரபரப்பு புகார்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது பரபரப்பு புகார்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி: ராஜேந்திரபாலாஜி மீது பரபரப்பு புகார்
Published on

சென்னை,

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள அழகப்பாபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர் எனக்கு நல்ல நண்பர். அரசு வேலை வாங்கி தருவதாக அவர் சொன்னதன் பேரில், 39 பேரிடம் ரூ.2 கோடி அளவுக்கு வசூல் செய்து கொடுத்தேன். இதுகுறித்து அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜியிடம் தலைமைச்செயலகத்தில் அவருடைய அலுவலகத்தில் வைத்து கேட்டேன். அவரும் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார். ஆனால் சொன்னபடி அரசு வேலை யாருக்கும் வாங்கி கொடுக்கவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, கொடுத்த பணத்தை மீட்டு தரும்படி வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com