குற்றாலம் அருவிக்கு செல்ல ரூ.20 நுழைவு கட்டணம்

பழைய குற்றாலம் அருவிக்கு செல்ல ரூ.20 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.
குற்றாலம் அருவிக்கு செல்ல ரூ.20 நுழைவு கட்டணம்
Published on

தென்காசி,

பழைய குற்றாலம் அருவியில் பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகின்றன. கேரளம் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், குற்றாலத்தில் இந்த மாத இறுதி யில் குளுகுளு சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் பழைய குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல் வதற்கு ரூ.20 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என்று வனத்துறை அறி வித்துள்ளது. இதுகுறித்து தென்காசி மாவட்ட வன அலுவலர் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் பழைய குற்றாலம் அருவி யில் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த 'வண்ணப்பூ ரணி சுற்றுச்சூழல் சுற்றுலா குழு' அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பயணிகள் பாதுகாப்பு மற்றும் நிலைத்த சுற்றுலா வளர்ச் சியை உறுதி செய்ய பின்வரும் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

அதன்படி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் சோப்பு, ஷாம்பு, எண்ணெய், டிடர்ஜென்ட் உள்ளிட்ட எந்தவொரு ரசாயன பொருட்களும் பயன் படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் மற்றும் அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களும் முற்றி லும் தடை செய்யப்பட்டுள்ளது. நுழைவுவாயிலில் அனைத்து பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுவர். குரங்குகள் மற்றும் பிற காட்டு விலங் குகளுக்கு உணவு வழங்குவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

தனியார் வாகனங்கள் சுற்றுச்சூழல் சுற்றுலா பகுதிக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவது கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். குறைந்த அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆட்டோக்கள் மட்டும் குறிப்பிட்ட இடம் வரை அனுமதிக்கப்படும். வனத்துறை, சுற்றுச்சூழல் சுற்றுலா குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற் றுச்சூழல் நட்பு வாகனங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும். இதற்கான கட்டணம் ஒருவருக்கு ரூ.10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பழைய குற்றாலம் அருவிக்கு செல்ல நுழைவு கட்டணமாக ஒருவருக்கு ரூ.20 வசூலிக்கப்படும். சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். இவ்விதிமுறைகளை அமல்படுத்த வனத்துறை பணியாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா குழு உறுப்பினர்கள் அதிகாரம் பெற்றுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஒழுங்கு பேணப்படும்.

இந்த சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டம் உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கி, வன மற்றும் விலங்கு பாதுகாப்பை மேம்படுத் தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. பழைய குற்றாலம் அருவியின் இயற்கை அழகையும் சுற்றுச்சூழல் சமநிலையையும் பாதுகாக்க, அனைத்து பொதுமக்களும் வனத்துறையுடன் முழுமையாக ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com