கடலில் மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் - முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

டவ்தே புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடலில் மாயமான மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் - முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Published on

சென்னை,

அரபிக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 21 பேர் கடந்த மாதம் வீசிய டவ்தே புயலில் சிக்கி காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், மயிலாடுதுறையைச் சேர்ந்த 3 மீனவர்கள் மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த 12 மீனவர்கள் இந்த புயலில் சிக்கி மாயமாகி உள்ளனர்.

அவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தக் கோரி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மீன்பிடி தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டிருந்த அந்த மீனவ குடும்பங்களுக்காக தமிழக அரசு மொத்தம் 4 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com