மேல்மருவத்தூர் அருகே விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகை

மேல்மருவத்தூர் அருகே விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகையை பாரத ஸ்டேட் வங்கி வழங்கியது.
மேல்மருவத்தூர் அருகே விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் காப்பீட்டு தொகை
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பாரத ஸ்டேட் வங்கியில் மேல்மருவத்தூரை சேர்ந்த அசோகன் (வயது 65) என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கி கணக்கு தொடங்கி உள்ளார். அப்போது அவர் சேமிப்பு கணக்குடன் சேர்த்து ஆண்டுக்கு ரூ.1,000 விபத்து காப்பீடு செய்துள்ளார். இநத நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். தொடர்ந்து அவருக்கு காப்பீட்டு தொகை ரூ.20 லட்சத்துக்கான காசோலையை அசோகனின் மகனான அவினாஷிடம் செங்கல்பட்டு மாவட்ட மண்டல மேலாளர் சுப்பையா வழங்கினார். அப்போது செங்கல்பட்டு கிளை மேலாளர் மஞ்சுஷா உடனிருந்தார்.

இது குறித்து மண்டல மேலாளர் சுப்பையா கூறுகையில்:-

பாரத ஸ்டேட் வங்கி கிளையில் ஆண்டுக்கு ரூ.1,000 மட்டும் செலுத்தி வாடிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு சாலை விபத்தாலோ, மின்சாரம் தாக்கியோ அல்லது பாம்பு உள்ளிட்ட விஷ தன்மையுள்ள உயிரினங்களால் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.20 லட்சம் வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com