ரூ.2,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு

மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி கோட்டை அலுவலகத்தில் வருகிற 28-ந்தேதி ஏலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு
Published on

சென்னை,

ரூ.2,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 2,000 கோடி மதிப்புள்ள, பங்குகள் வடிவிலான 7.39 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2034 ரூபாய் 1,000 கோடி மறுவெளியீடு மற்றும் 7.59 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2041 ரூபாய் 1,000 கோடி மறுவெளியீடு ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் ஜீலை 28, 2026 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) ஜீலை 28, 2026 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com