வெள்ள பாதிப்பு: ரூ.2,000 நிவாரணத்துக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்

ரூ.2 ஆயிரம் வெள்ள நிவாரணத்திற்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்படும் என்று அமுதா ஐ.ஏ.எஸ் அறிவித்துள்ளார்.
வெள்ள பாதிப்பு: ரூ.2,000 நிவாரணத்துக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்
Published on

கடலூர்,

கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதித்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அது போல் வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழந்திருந்தால் தலா ரூ 4 ஆயிரமும், கோழி இறந்திருந்தால் தலா ரூ 100 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.மேலும் எருது, பசு இறந்திருந்தால் ரூ 37,500 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வெள்ள நிவாரணம் ரூ.2,000 வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமுதா ஐ.ஏ.எஸ் கூறியதாவது:- விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன்கார்டுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் அறிவித்துள்ளார். அதற்கான கணக்கீட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் தயாரித்துள்ளார்கள். இன்று முதல் வெள்ள நிவாரணத்திற்கான டோக்கன் விநியோகிக்கப்படும். டோக்கன் விநியோகிக்கப்பட்டு இரண்டு முதல் மூன்று நாட்களில் அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படும்" என்றார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com