ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கர்நாடக துணை முதல் மந்திரி வெளியிட்டார்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் தலைமையிலான குழு தயாரித்த தேர்தல் அறிக்கையை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் வெளியிட்டார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

டியூஷன் அக்கா திட்டம் செயல்படுத்தப்படும்

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

தமிழகம் ஆன்மிக சுற்றுலா நகராக மாற்றப்படும்.

நாய்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி, கருத்தடை

இதுபோன்ற வாக்குறுதிகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com