மதுரையில் ரூ.3¾ கோடி ஹவாலா பணம் பறிமுதல் - 5 பேர் கைது

சட்டவிரோதமாக ஹவாலா பணத்தை ஒரு கும்பல் காரில் வைத்து கை மாற்றுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாகன நிறுத்தத்தில் சட்டவிரோதமாக ஹவாலா பணத்தை ஒரு கும்பல் காரில் வைத்து கை மாற்றுவதாக விளக்குத்தூண் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஹவாலா பணம் வைத்திருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3¾ கோடி ஹவாலா பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக பாபுராவ் உள்ளிட்ட 5 பேரை விளக்குத்தூண் போலீசார் கைது செய்தனர். போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள், கைதானவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story






