விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு


விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 29 Nov 2024 8:58 AM IST (Updated: 29 Nov 2024 11:14 AM IST)
t-max-icont-min-icon

தருமபுரி மாவட்டம், அலகட்டு கிராமத்தில் விஷப்பாம்பு கடித்ததில் 14 வயது சிறுமி உயிரிழந்தார்.

சென்னை,

தருமபுரி மாவட்டம், பென்னாகரம், அலகட்டு கிராமத்தில் விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அலகட்டு மலை கிராமத்தைச் சேர்ந்த ருத்ரப்பா சிவலிங்கி தம்பதியரின் மகள் கஸ்தூரி (வயது 14) என்பவர் நேற்று (28.11.2024) பிற்பகல் அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் கீரை பறித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விஷப்பாம்பு கடித்ததில், உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story