மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் வட்டம், உடையநாச்சி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (45 வயது) என்பவர் 24.1.2026 அன்று இரவு கட்டடப் பணி நடந்து கொண்டிருந்த அவரது வீட்டிற்கு மின்விளக்குப் போட முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்த ரமேஷ் என்பவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதுடன் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com