விபத்து, உடல்நலக்குறைவால் உயிரிழந்த 57 போலீசார் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

விபத்து, உடல்நலக்குறைவால் உயிரிழந்த 57 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
விபத்து, உடல்நலக்குறைவால் உயிரிழந்த 57 போலீசார் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
Published on

சென்னை,

இது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை விருகம்பாக்கம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், வேப்பேரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி, ராயப்பேட்டை ஏட்டு ராஜேந்திரன், சிந்தாதிரிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், பரங்கிமலை ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி, ஜெ.ஜெ. நகர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், துறைமுகம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளிபாபு.

சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், காஞ்சீபுரம் சூணாம்பேடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் உள்ளிட்டோர் உடல் நலக்குறைவால் காலமானார்கள் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

பரங்கிமலை ஆயுதப்படை போலீஸ்காரர் நல்லுசாமி, அரசு அருங்காட்சியக புறக்காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பநாதன், கொடுங்கையூர் ஏட்டு பழனிகுமார் உள்ளிட்டோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்தும் வேதனை அடைந்தேன்.

இவ்வாறு உடல் நலக்குறைவு மற்றும் விபத்துகளில் மாநிலம் முழுவதும் உயிரிழந்த 57 போலீசார் குடும்பத்துக்கும் தலா ரூ.3 லட்சம், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com