திருச்சியில் ரூ.30½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சியில் ரூ.30½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சியில் ரூ.30½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
Published on

சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் டைகர் ஏர்வேஸ் விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த சுகைல் அகமது (வயது 21) என்ற பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, ரூ.30 லட்சத்து 52 ஆயிரம் மதிப்புள்ள 501 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து சுகைல் அகமதுவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com