திருவாரூரில் முதல் தவணை தடுப்பூசிக்கு ரூ.300 பரிசு - ஊராட்சி நிர்வாகம் அதிரடி

திருவாரூரில் தடுப்பூசி முகாமில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் 300 ரூபாய் பரிசு வழங்கியுள்ளது.
திருவாரூரில் முதல் தவணை தடுப்பூசிக்கு ரூ.300 பரிசு - ஊராட்சி நிர்வாகம் அதிரடி
Published on

திருவாரூர்,

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின்படி, அனைத்து நாடுகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

கிராமப்புறங்களில் சுகாதாரத்துறையினர் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று, அவர்களுக்கு தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தடுப்பூசி செலுத்துகின்றனர். சில இடங்களில் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்க சிறப்பு பரிசுகளும் அறிவிக்கப்படுகின்றன.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களுக்கு ஆதிரங்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் 300 ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அங்கு இன்று முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் 300 ரூபாய் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com