மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் 'ரூ.30,000 கோடி' ஆடியோ விவகாரம் - அமலாக்கத்துறையில் மேலும் ஒரு புகார்

30 ஆயிரம் கோடி ரூபாய் ஆடியோ விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வருமான வரித்துறை, அமலாக்கத்துறைக்கு மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் 'ரூ.30,000 கோடி' ஆடியோ விவகாரம் - அமலாக்கத்துறையில் மேலும் ஒரு புகார்
Published on

சென்னை,

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக இருந்தபோது பேசியதாக, சமூக வலைதளங்களில் கடந்த ஏப்ரல் மாதம் ஆடியே வைரலானது. இதுகுறித்து மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத்துறைக்கு அ.தி.மு.க வழக்கறிஞர் பாபு முருகவேல் புகார் அளித்தார்.

இதுதெடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மத்திய நிதித்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கும் புகார் மனு அனுப்பினார்.

இந்நிலையில், ஆடியே விவகாரத்தில் மீண்டும் மேல் நடவடிக்கை மற்றும் தொடர் நடவடிக்கைக்காக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் காவல்துறை தலைமை இயக்குனருக்கு வழக்கறிஞர் பாபு முருகவேல் புகார் அளித்துள்ளார். ஆடியேவில் பதிவான குரல் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுடையது இல்லை எனும் பட்சத்தில், அதுபோன்ற குரல் பதிவை பதிவு செய்து குற்றம் சுமத்தியிருப்பது யார் என்பதை கண்டறிந்து, உரிய நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com