வெள்ள பாதிப்பை தடுக்க சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரூ.338 கோடி நிதி ஒதுக்கீடு


வெள்ள பாதிப்பை தடுக்க சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரூ.338 கோடி நிதி ஒதுக்கீடு
x

கோப்புப்படம் 

முதல்கட்டமாக சென்னை ஆலந்தூரில் உள்ள மணப்பாக்கம் கால்வாயில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

சென்னை

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. அரசு ஓரளவுக்கு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொண்டாலும் மேக வெடிப்பு மூலம் சில மணி நேரங்களிலேயே அதிக மழை கொட்டி தீர்த்து விடுகிறது. அதனால் கால்வாய்களில் மழைநீர் வழிந்தோட முடியாமல் சாலைகளில் குளம்போல் தேங்கி விடுகிறது.

எனவே தமிழக அரசு நீர்வளத்துறை மூலம் முன்னெச்சரிக்கை பணிகளை தொடங்கி உள்ளது. அதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மட்டும் ரூ.338 கோடி ஒதுக்கி உள்ளது. அதில் முதல்கட்டமாக ரூ.9 கோடியே 40 லட்சம் செலவில் சென்னை ஆலந்தூரில் உள்ள மணப்பாக்கம் கால்வாயில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. அதேபோல் மேலும் சில பணிகளை தொடங்கி இரண்டு மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story