வீட்டை விற்பதாக ரூ.35 லட்சம் மோசடி: கணவன்-மனைவி கைது

திருமுல்லைவாயலில் வீட்டை விற்பதாக ரூ.35 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
வீட்டை விற்பதாக ரூ.35 லட்சம் மோசடி: கணவன்-மனைவி கைது
Published on

சென்னை அமைந்தகரை அரசமர தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 47). இவர், திருமுல்லைவாயல் செந்தில் நகர், திலகர் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (35) என்பவரிடம் அவரது வீட்டை விலைக்கு வாங்குவதற்காக கடந்த ஆண்டு மே மாதம் ரூ.35 லட்சம் முன்பணம் கொடுத்தார்.

ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட வெங்கடேசன், சொன்னது போல் வினோத்துக்கு வீட்டை கிரையம் செய்து கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு வேறு ஒரு நபருக்கு கூடுதல் விலைக்கு தனது வீட்டை கிரையம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத், தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டார். பணத்தை தரமறுத்த வெங்கடேசன், வினோத்தை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த மோசடி குறித்து வினோத், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருமுல்லைவாயல் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன், அவருடைய மனைவி கோமதி (29) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com