டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.3,600 கோடி ஊழல்: கடும் நடவடிக்கை எடுப்போம்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

டாஸ்மாக்கை தனியார்மயமாக்கும் நோக்கம் இல்லை என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்
அமைச்சர் விக்னேஷ்
Published on

கோவையில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் முதல் அமைச்சர் அறிவித்தபடி 717 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்பதே எங்கள் லட்சியம், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம். ஊழல் செய்த நபர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். டாஸ்மாக்கை தனியார்மயமாக்கும் நோக்கம் இல்லை.

பாட்டிலுக்கு ரூ.10 வாங்கக் கூடாது . வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளோம். மாதம் ரூ.100 கோடி தனிநபர் கணக்கில் சென்றுள்ளது. டாஸ்மாக்கில் ஊழல் இருக்காது. ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். ரூ. 3,600 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com