ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
Published on

சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் விதிகள் அமலில் இருந்தபோது, தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்கம் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரெயிலில் கொண்டு செல்ல முயன்ற பணம் ரூ.4 கோடி, நெல்லை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்று வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தாம்பரம் போலீசார் நயினார் நாகேந்திரனுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பினர். இதற்கிடையே ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com