ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியால் மும்பையில் வருகிற 10-ந்தேதி இந்த ஏலம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழ்நாடு அரசு நிதித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 4,000 கோடி மதிப்பில் 3 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 1,000 கோடி, 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூபாய் 2,000 கோடி மற்றும் 6.94 சதவீத தமிழ்நாடு அரசு பிணையப் பத்திரங்கள் 2,055 ரூபாய் 1,000 கோடி மறுவெளியீடு ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் ஜீன் 10, 2025 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) ஜீன் 10, 2025 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com