ஆட்டோ டிரைவர் மனைவிக்கு ரூ.4.75 கோடி ஜி.எஸ்.டி... அதிர வைத்த நோட்டீஸ்

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாஸ்மின் வலியுறுத்தியுள்ளார்.
Image Credits: AI
Image Credits: AI
Published on: 

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவருக்கு, ரூ.4.75 கோடி ஜி.எஸ்.டி. வரி நிலுவையில் இருப்பதாக வந்த நோட்டீசால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ரூ.4.75 கோடி வரி நிலுவை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பாபு நகரைச் சேர்ந்தவர் சையத் காதர் (38). ஆட்டோ டிரைவரான இவரது மனைவி யாஸ்மின் (33), வீட்டு வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், யாஸ்மினுக்கு சென்னை பூந்தமல்லியில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் இருந்து நேற்று நோட்டீஸ் ஒன்று வந்தது. அதில், சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் 'டி.வி.எல். யாஸ் டிரேடர்ஸ்' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனத்தின் 2024-2025-ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. வரியாக ரூ.4 கோடியே 75 லட்சம் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையே, யாஸ்மினின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

ஆதார், பான் அட்டை தவறாக பயன்படுத்தப்பட்டதா?

அந்த புகார் மனுவில், தான் எந்த நிறுவனத்தையும் நடத்தவில்லை என்றும், தனது பான் அட்டை மற்றும் ஆதார் அட்டையை மர்ம நபர்கள் தவறாகப் பயன்படுத்தி நிறுவனத்தை தொடங்கியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

X