லாரி ஏற்றி கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி - முதல்வர் அறிவிப்பு

லாரி ஏற்றி கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
லாரி ஏற்றி கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி - முதல்வர் அறிவிப்பு
Published on

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வாழவல்லான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரக்கு வாகனம் ஏற்றிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உதவி ஆய்வாளர் பாலு, கொற்கையில் ரோந்து பணியில் இருந்த போது போதையில் தகராறில் ஈடுபட்ட முருகவேல் என்ற நபரை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த முருக வேல் சரக்கு வாகனத்தை எடுத்து வந்து எஸ்.ஐ பாலுவை கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். குற்றம் சாட்டப்பட்டுள்ள முருகவேலை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, லாரி ஏற்றி கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி உதவியை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், பணியின் போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், காயம் அடைந்த காவலர் பொன் சுப்பையாவுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com