ஏக்கருக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்

ஏக்கருக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்
ஏக்கருக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்
Published on

வெளிப்பாளையம்:

நாகையை அடுத்த பனங்குடி கிராமத்தில் சி.பி.சி.எல். நிறுவனம் விரிவாக்க பணிகளை தொடங்கி உள்ளது. 618 ஏக்கர் பரப்பளவில் ரூ.38 ஆயிரம் கோடியில் செயல்படுத்த உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிலத்தின் உரிமையாளர்களுக்கு உரிய தொகை வழங்க வலியுறுத்தியும் நாகை தொழிற்பேட்டையில் இருந்து விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஊர்வலமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது விரிவாக்க பணிகளுக்கு எடுக்கப்படும் நிலத்திற்கு ஏக்கருக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை விளை நிலங்களில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது எனவும், சுமூக தீர்வு ஏற்படாத பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com