

சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த டிசம்பரில் துவங்கிய நிவர் புயல், புரெவி புயல் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்த தொடர் கனமழையால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் நெற்பயிர்கள் சேதமடைந்ததில் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மழையால் சேதமடைந்த பகுதிகளில் பாதிப்பை முழுமையாக கணக்கெடுத்து ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கிட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.