கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிதியுதவிக்கு ரூ.685 கோடி செலவு: தமிழக அரசு தகவல்

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிதியுதவி ,செலவு கணக்கை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிதியுதவிக்கு ரூ.685 கோடி செலவு: தமிழக அரசு தகவல்
Published on

சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிதியுதவி ,செலவு கணக்கை தமிழக அரசு வெளியிட்டுள்ளது கடந்த ஓராண்டில் கொரேனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க ரூ.685 கோடி செலவிடப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரனா தடுப்பு உபகரணங்களான RT PCR KIT, ரெம்டெசிவர், ஆக்ஸிஜன் சிலிண்டர் ஆகியவைகள் மட்டும் ரூ.303 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

கொரனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நீதிபதிகள், 94 காவலர்கள், 34 மருத்துவர்கள், 249 முன்களப்பணியாளர்கள், 10 செய்தியாளர்கள் என 400 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவரம்:

*முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பெறப்பட்ட நன்கொடை ரூ.553 கோடி.

*RT PCR KIT, ரெம்டெசிவர், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உபகரணங்கள் வாங்கிய செலவு ரூ.285 கோடி

*தொற்றால் ஒரு பெற்றோரை இழந்த 9565 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் என வழங்கப்பட்ட நிதியுதவி ரூ.287 கோடி

*தொற்றால் உயிரிழந்த நீதிபதிகள், காவலர்கள், முன்களப்பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிதியுதவி ரூ.95 கோடி

*தொற்றால் தன் இரண்டு பெற்றோர்களையும் இழந்த 322 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் என வழங்கப்பட்ட நிதியுதவி ரூ.16 கோடி

*கொரானா தொற்றால் ஒரு பெற்றோரை இழந்த 9 இலங்கை தமிழ் குழந்தைகளுக்கு தலா 3 லட்சம் என வழங்கப்பட்ட நிதியுதவி ரூ.27 லட்சம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்ட்டுள்ளது 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com