ஆளில்லாத வீட்டுக்கு ரூ.7½ லட்சம் மின் கட்டணம் - பூ வியாபாரி அதிர்ச்சி

ஆளில்லாத வீட்டுக்கு ரூ.7½ லட்சம் மின் கட்டணம் - பூ வியாபாரி அதிர்ச்சி

மின்வாரிய அலுவலகத்தில் அவர் கேட்ட போது தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டதாகவும் அந்த கட்டணத்தை செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். பூ வியாபாரி. தற்போது இவர், பட்டிவீரன்பட்டியில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு, நிலக்கோட்டை அருகே குல்லிசெட்டிபட்டியில் உள்ளது. அந்த வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக குடியிருக்காமல் பூட்டி கிடக்கிறது.

ஆளில்லாத அந்த வீட்டை, முருகேசனின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் பராமரித்து வருகிறார். இந்த வீட்டுக்கு 2 மாதத்துக்கு ஒரு முறை மின் கட்டணமாக சராசரியாக ரூ.120 முதல் ரூ.150 வரை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி ரவிச்சந்திரனின் செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், மின்கட்டணமாக ரூ.7 லட்சத்து 46 ஆயிரத்து 1-ஐ அடுத்த மாதம் (பிப்ரவரி) 17-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக்கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் அவர் கேட்ட போது தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டதாகவும் அந்த கட்டணத்தை செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com