சென்னையில் கார் டிரைவர் வங்கிக் கணக்கில் டெபாசிட் ஆன ரூ.9 ஆயிரம் கோடி..!

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் டிரைவர், வங்கி கணக்கில் திடீரென 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆகியுள்ளது.
சென்னையில் கார் டிரைவர் வங்கிக் கணக்கில் டெபாசிட் ஆன ரூ.9 ஆயிரம் கோடி..!
Published on

சென்னை,

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமார். அவரது வங்கி கணக்கில் திடீரென 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆகியுள்ளது. இந்த நிலையில் தன்னை யாரோ ஏமாற்றுவதாக நினைத்த ராஜ்குமார், நண்பரின் வங்கி கணக்கிற்கு 21 ஆயிரம் ரூபாய் அனுப்பி 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆனதை உறுதி செய்துள்ளார்.

இதையடுத்து தவறுதலாக பணம் செலுத்தப்பட்டதாக டிரைவரை தொடர்பு கொண்டு வங்கி தரப்பு விளக்கமளித்தது. மேலும் செலவு செய்த 21 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுக்க வேண்டாம் என்றும் வாகன கடன் வழங்குவதாகவும் சமரசம் பேசியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com