விருத்தாசலம் பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.90 லட்சம்: அமைச்சர் கே.என்.நேரு


விருத்தாசலம் பழைய பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.90 லட்சம்: அமைச்சர் கே.என்.நேரு
x
தினத்தந்தி 15 April 2025 10:51 AM IST (Updated: 15 April 2025 1:43 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் பழைய பேருந்து நிலையப் பணிகள் 2025-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சென்னை

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், விருத்தாசலம் புறவழிச் சாலையில் பேருந்து நிலையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா என எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:

விருத்தாச்சலம் புறவழி சாலையில் பேருந்து நிலையம் அமைக்க வருவாய்த்துறை இடம் இருந்தால் அமைப்பதாகவும், அல்லது தனியாரிடமிருந்து நிலம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், விருத்தாசலம் பழைய பேருந்து நிலையம் புனரமைப்பு பணி ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 2025-ம் ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story