

சென்னை,
பொங்கல் பண்டிகையினையொட்டி நம்ம ஊரு திருவிழா எனும் தலைப்பில் சென்னையில் 7 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலைவிழாவுக்காக 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலை பண்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கலை பண்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு, 3 நாட்கள் நடைபெறும் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிக்காக 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை, திருச்சி மற்றும் கோவை ஆகிய இடங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.