தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் நடமாடும் ரேசன் கடைகள் - அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் நடமாடும் ரேசன் கடைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் நடமாடும் ரேசன் கடைகள் - அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
Published on

சென்னை,

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு துறை பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த அமைச்சர் செல்லூர் ராஜு அங்குள்ள அதிகாரிகளுடன் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து வரக்கூடிய நாட்களில் செய்ய வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது;-

தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் 3,501 நடமாடும் ரேசன் கடைகளை திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு கட்டடம், உள்ளாட்சி நிறுவன கட்டடம், மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் ரேஷன் கடையை திறக்கலாம் என்று கூறியுள்ளது. நடமாடும் ரேஷன் கடைகள் திறக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 3,501 நடமாடும் ரேஷன் கடைகள் சுமார் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com