ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி யூனியன் கூட்டம்

ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி யூனியன் கூட்டம் நடந்தது.
ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி யூனியன் கூட்டம்
Published on

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி யூனியன் குழு சாதாரண கூட்டம் யூனியன் தலைவர் ராதிகா பிரபு தலைமையில் துணைத்தலைவர் சேகர், யூனியன் ஆணையாளர் உம்முல் ஜாமியா ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கவுன்சிலர் பாண்டி பேசும் போது ஆய்ங்குடி முதல் கருங்குடி வரை சேதமான சாலைகளை சீரமைக்க கோரி பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒன்றிய அலுவலக அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் பணிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளோம் என கூறினார்.பிரபு பேசும் போது, புல்லமடை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் 2 மாதங்களாக காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றார். வெங்கடாஜலபதி பேசும் போது, ஏ.ஆர்.முருகன்குளம், வாகைக்குடி சாலை ஓரங்களில் காட்டு கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்றார்.துணைத்தலைவர் சேகர் பேசும் போது, 6 மாதத்திற்கு முன்பு ஆணையாளர் பணிமாறுதல் பெற்று சென்று உள்ளார். நிரந்தர ஆணையாளர் இல்லாததால் பணி பாதிக்கப்படுகிறது என்றார். யூனியன் தலைவர், ஆணையாளர் பேசும் போது, கவுன்சிலர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com