குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 : ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத்தேவையில்லை -பழனிவேல் தியாகராஜன்

பெண்கள் உரிமைத்தொகை திட்டத்தை பெற ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத்தேவையில்லை என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.
குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 : ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத்தேவையில்லை -பழனிவேல் தியாகராஜன்
Published on

சென்னை

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இன்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) இன்று செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

முறைகேடுகளை களைந்து நகைக்கடன் தள்ளுபடி நடவடிக்கையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்.

பெட்ரோல் மீதான வரி குறைப்பால் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்

கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.2,756 கோடி தள்ளுபடி

குடும்ப தலைவியாக இருக்கும் பெண்களுக்கு மட்டுமே பெண்கள் உரிமைத் தொகை திட்டம் என்பது தவறான தகவல். பெண்கள் உரிமைத்தொகை திட்டத்தை பெற ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத்தேவையில்லை.

மசூதிகள், தேவாலயங்களைப் புதுப்பிக்க தலா ரூ.6 கோடி : நிதி அமைச்சர்

மொத்த வருவாய் செலவினம் - ரூ.2,61,188.57 கோடி என கணிப்பு 2021-22ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.58,692.68 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com