6,689 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.215 கோடி ஊக்கத்தொகை: தமிழக அரசு

ஊக்கத்தொகைகள் அனைத்தும் போட்டிகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.
6,689 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.215 கோடி ஊக்கத்தொகை: 
தமிழக அரசு
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்ப

தாவது,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இளைஞர்களை ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுப டுத்திடவும், சிதறிக் கிடக்கும் இளைஞர்களின் ஆற்றல்களை திரட்டிடவும், அவர்களை மனஉறுதி படைத்தவர்களாகவும், எதிர்கால வாழ்வை நம்பிக் கையோடு எதிர்கொள்பவர்களாகவும், உருவாக்கும் பெரும் பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சிறப்பான பணிகளுக்கு ஊக்கமளித்து வருகிறார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை பல்வேறு சாத னைகளை நிகழ்த்தியுள்ளது. செஸ் ஒலிம்பியாட், சென்னை பார்முலா4 கார்பந்தயம், சர்வதேச பெண்கள் டென்னிஸ், உலகக் கோப்பை ஸ்கு வாஷ், ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு, சர்வதேச அலைச்சறுக்கு, முதல்-அமைச்சர் கோப்பை உள்ளிட்ட போட்டிகளை நடத்தி உலக அளவில் விளையாட்டு ஆர்வலர்களிடையே தமிழ்நாடு ஒரு முக்கிய விளையாட்டு களமாக மதிக்கப்படுகிறது.

போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்கும் வீரர்களுக்கு பயிற்சிகள் பெற உதவித் தொகை, தங்குமிடம் வசதி, போட்டிகளில் பங்கேற்க வெளியூர்க ளுக்கு சென்று வரும் பயணச் செலவுகள், வெற்றி பெற்ற வீரர், வீராங்க னைகளுக்கு பரிசுகள், ஊக்கத்தொகைகள் அனைத்தும் போட்டிகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக் கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரர்கள் உள்பட 6,689 வீரர், வீராங்கனைக ளுக்கு ரூ.215.78 கோடி ஊக்கத்தொகையாக வழங்கி பாராட்டப்பட்டுள் ளது.

மேலும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வழங்கும் 3 சதவீத இடஒதுக்கீட் டின் கீழ் 70 மாற்றுத்திறனாளி உள்ளிட்ட 301 வீரர்களுக்கு அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் பணிநியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வேறு எந்த மாநிலத்திலும் நடைபெறாத வகையில் கடந்த 5 ஆண்டு களில் மட்டும் திராவிட மாடல் அரசின் முனைப்பால் 40 சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டதன் மூலம் இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com