ரூ.23¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்; 3 பேர் கைது

ரூ.23¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரூ.23¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்; 3 பேர் கைது
Published on

செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று காலை கோலாலம்பூர், சார்ஜா மற்றும் துபாயில் இருந்து வந்த விமானங்களில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கோலாலம்பூரில் இருந்து வந்த பயணி தனது பேண்ட் பாக்கெட்டில் சிறிய தங்க நகைகளை எடுத்து வந்தது தெரியவந்தது. அதேபோல் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வந்த 2 பயணிகளை சோதனை செய்தபோது, அவர்கள் ஜீன்ஸ் பேண்டில் தங்க பட்டன் பொருத்தி தங்கத்தை கடத்தி வந்ததும், தங்கத்தை பிளாஸ்டிக் பேப்பரில் ஸ்பிரே செய்து அதனை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.23 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான 401 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com