24 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3½ கோடி உதவித்தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 49 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3½ கோடியில் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்
24 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3½ கோடி உதவித்தொகை
Published on

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சென்னையில் நடந்த விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கிய தமிழ்நாடு முதல்-அமைச்சர், மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1,000 உதவித்தொகையை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்குவதற்க்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இத்திட்டத்தின்படி தமிழ்நாட்டில் வருவாய்த்துறை மூலம் உதவித்தொகை பெற்றுவரும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 மாற்றுத்திறனாளிகள் பயனடைவர். இதற்காக ஆண்டுக்கு ரூ.2 கோடியே 63 லட்சத்து 58 ஆயிரம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.3 கோடியில்...

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் விழுப்புரம் தாலுகாவில் 4,704 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலும், வானூர் தாலுகாவில் 1,642 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பிலும், திண்டிவனம் தாலுகாவில் 3,514 பேருக்கு ரூ.52 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலும், செஞ்சி தாலுகாவில் 3,989 பேருக்கு ரூ.59 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலும், விக்கிரவாண்டி தாலுகாவில் 3,492 பேருக்கு ரூ.52 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலும், மரக்காணம் தாலுகாவில் 1,129 பேருக்கு ரூ.16 லட்சத்து 93 ஆயிரத்து 500 மதிப்பிலும், கண்டாச்சிபுரம் தாலுகாவில் 1,837 பேருக்கு ரூ.27 லட்சத்து 55 ஆயிரத்து 500 மதிப்பிலும், மேல்மலையனூர் தாலுகாவில் 2,115 பேருக்கு ரூ.31 லட்சத்து 72 ஆயிரத்து 500 மதிப்பிலும், திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவில் 1,627 பேருக்கு ரூ.24 லட்சத்து 40 ஆயிரத்து 500 மதிப்பிலும் என மொத்தம் 24 ஆயிரத்து 49 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 கோடியே 60 லட்சத்து 73 ஆயிரத்து 500 மதிப்பில் மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதியுதவி மூலம் அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் நிலை உருவாகிவிடும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com